பிளஸ் 2 தேர்வுக்கு இன்று 'தத்கல்' பதிவு

சென்னை, பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்று முதல், 'தத்கல்' முறையில்
விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 பொது தேர்வை, நேரடியாக தனித்தேர்வர்கள் எழுதும் முறை, இந்த கல்வி ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 பொது தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியும்.அதனால், இந்த கல்வி ஆண்டில், வரும் மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொது தேர்வில் மட்டுமே, தனித்தேர்வர்கள், நேரடியாக பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.அதில், விண்ணப்பிக்க தவறியோர், 'தத்கல்' முறையில், இன்று முதல், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். பதிவு செய்வதற்கான ஆன்லைன் மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...