தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வு எழுத
தொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ. 30, பதிவுக் கட்டணம் ரூ. 25 கட்டணங்களையும் சேர்த்து மாணவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாகச் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு தேர்வுக்குப் பதிவு செய்ய பிப்ரவரி 7 கடைசி நாளாகும். அபராதத் தொகை ரூ. 100 செலுத்தி, பிப்ரவரி 14 வரை தேர்வுக்குப் பதிவு செய்யலாம்.
அதன் பிறகு, தட்கல் முறையில் ரூ. 500 அபராதம் செலுத்தி மார்ச் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.