4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா!

உலக நாடுகளிலேயே 4ஜி நெட்வொர்க் சேவை வேகத்தில் இந்தியா கடைசி இடத்தில்
இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஓப்பன் சிக்னல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவின் 4ஜி நெட்வொர்க் வேகம் 6.07 எம்பிபிஎஸ் ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 2017 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 29 வரையில் உலகின் 88 நாடுகளிடையே சுமார் 5,000 அளவீடுகளுடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகின் ஆறு கண்டங்களைச் சேர்ந்த சுமார் 38 லட்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாட்டாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னதாக 2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த இதேபோன்றதோர் ஆய்வறிக்கையில் இந்தியாவின் 4ஜி நெட்வொர்க் வேகம் 6.13 எம்பிபிஎஸ் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

4ஜி நெட்வொர்க் வேகத்தில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. இதன் வேகம் சராசரியாக 44.31 எம்பிபிஎஸ் ஆக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்து (42 எம்பிபிஎஸ்) இருக்கிறது. 4ஜி சேவை பரவலாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா (97%) இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜப்பான், நார்வே, ஹாங்காங் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. 4ஜி சேவைப் பயன்பாட்டில் இந்தியா 86.26 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறது. இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் சிங்கப்பூரை விட இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...