எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களுக்கான
வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்ரவரி 17) சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயா கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் கல்விச்சான்றிதலுடன், ஆதார் அட்டையையும் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும் இன்று அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை ஏற்கிறார். இதில் 70க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 18) நடைபெற்றவுள்ளது. இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் சுமார் 3000 பணியிடங்களுக்குப் பணியாளர் தேர்வு நடைபெறவுள்ளது. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.