சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான
வழக்கில், தொலைதூரக் கல்வி மைய முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சேலம் பெரியார் பல்லைக்கழகத் தொலைதூரக் கல்வியில் கொல்கத்தாவைச் சேர்ந்த சரோஜ்குமார் மஜூம் என்ற மாணவர், இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் புரொபஷனல் கல்வி மையத்தில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதினார்.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் அவருக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் தகவல் பெற்றதில் கட்டணம் செலுத்தாததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சரோஜ்குமார் மஜூம், மீண்டும் 2014ஆம் ஆண்டு கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ் பெற்றார். மேலும் இந்த பிரச்னை குறித்து ஆளுநருக்கு புகாரும் அளித்திருந்தார்.
இது தொடர்பாக 2016ஆம் ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்திய விசாரணையில், தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் ரூ.28 லட்சம் மோசடி நடந்திருப்பதாக தெரியவந்தது. நாடு முழுவதும் 8 கோடி வரை மோசடி நடந்து இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து, தொலைதூரக் கல்வி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் முகர்ஜி ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தொலைதூரக் கல்வி மைய முன்னாள் இயக்குனர் குணசேகரன், முன்னாள் தமிழ்த் துறை தலைவர் மாதையன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 24) விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், முன்னாள் தமிழ்த் துறை தலைவர் மாதையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணி இந்த முறைகேடுக்கும் மாதையனுக்கு தொடர்பு இல்லை என வாதிட்டார். தொலைதூரக் கல்வி மைய முன்னாள் இயக்குநர் குணசேகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதே கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். இந்த விவாதத்துக்குப் பிறகு, குணசேகரன், மாதையன் ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இருவரும் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார்.