போராட்டத்தை அடுத்து விடுப்பு பெற்ற ஊழியர்கள்!!!

தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு மாதந்தோறும்
நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பணிசுமை குறித்த ஒப்பந்தம் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு மின் கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.), தமிழ்நாடு நேஷனல் எலெக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேஷன் (ஐ.என்.டி.யு.சி.), பி.எம்.எஸ். உள்பட அங்கீகரிக்கப்பட்ட 17 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் வார்தா புயல், ஓகி புயல் போன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டபோது மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பார்க்காமல் தங்களுடைய பணியை தியாக உணர்வோடு சிறப்பாகச் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மின்வெட்டு ஒரு நிமிடம்கூட இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தொழிலாளர்கள்தான் முக்கியக் காரணம். அப்படிப்பட்ட தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருக்கும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியாளர்களுக்கு 2.57 காரணியில் ஊதிய உயர்வும், மாதமொன்றுக்கு களப்பணி உதவியாளருக்கு குறைந்த பட்ச பணப்பலன் ரூ.3175 ஆகவும் அதிகபட்ச பணப்பலன் ரூ.7775 ஆகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இத்துடன், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டுவருகிறது என்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 4ஆவது சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...