தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் சமஸ்கிருதப் பாடல்!!!

சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட
நிகழ்வில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று (பிப்ரவரி 26) சென்னை கிண்டி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். விழாவில் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார். நிகழ்வில் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பம் உள்ளிட்டத் துறைகள்- ஐஐடி மெட்ராஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. விழாவில் நிதின் கட்கரி பேசுகையில், "தேசிய நீர்வழித் திட்டம் தொடர்பான உதவிகளுக்காகவே தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வலு சேர்க்கும்" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலான மகா கணபதி பாடலை மாணவர்கள் பாடினர். இதற்கு நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதுதான் இசைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தே இசைக்கப்படாமல் சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கரன் ராமமூர்த்தி, "மாணவர்கள் தாமாக முன்வந்தே சமஸ்கிருத பாடலைப் பாடினர். சமஸ்கிருத பாடல் சர்ச்சை தேவையற்றது" என்று குறிப்பிட்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...