இப்போதெல்லாம் இளைஞர்கள் வாழ்க்கையில் த்ரில் இருக்க வேண்டும் என
நினைக்கின்றனர். சிறிய ரிஸ்க்கூட இல்லையென்றால் வாழ்க்கை எப்படி சுவாரஸ்யமாக இருக்க முடியும் என்று கேட்கின்றனர். கார், பைக்கில் வேகமாகச் செல்ல வேண்டும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் எனப் பலவிதமான சாகசங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இது ஆபத்தில்தான் முடிகிறது.
பிப்ரவரி 2018ஆம் ஆண்டில் மூன்று இளைஞர்கள் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த 12 வயது சிறுவன் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தான். லாரியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதேபோல், பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் தெலங்கானா அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது ஒரு விபத்து. அதிலும் 12 வயதான சிறுவன் ஒருவன் லாரியில் மோதி உயிரிழந்தான்.
இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது சிறுவர்கள் வாகனம் ஓட்டும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இது ஹைதராபாத் போலீஸைச் செயல்படவும் தூண்டியது. 2016ஆம் ஆண்டு 2,775 சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.7,23,900 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,026 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க ஹைதராபாத் போலீஸ் ஒரு திட்டத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. 2018 பிப்ரவரியில் நான்கு பெற்றோர்களைப் பிடித்து ஒருநாள் முழுவதும் அவர்களைச் சிறையில் வைத்தனர். ஒருவர் இரண்டு நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல் துறை துணை ஆணையர் ஏ.வி.ரங்கநாத், சிறார்களுக்குத் தண்டனை அபராதமாக விதிக்கப்படுகிறது எனக் கூறினார். இந்த நான்கு பேரின் பிள்ளைகள் எந்தவித விபத்திலும் சிக்கவில்லை. இருப்பினும், இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி, சிறுவர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பும் பெற்றோர்கள் மீதுதான்.