மக்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பல்வேறு ஆரம்பக்கட்டப்
பணிகள் உட்பட சுமார் 89,500 பணியிடங்களை நிரப்பவுள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பல நுழைவு நிலை பணியிடங்களை நிரப்பவுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. கேங்க் மென், ஸ்விட்ச் மென், டிராக் மென், தொழில்நுட்பவியலாளர்கள், கேபின் மென், வெல்டர்கள், துணை லோகோ பைலட்கள், உதவியாளர்கள் மற்றும் போர்ட்டர்கள் போன்றோர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. தற்போது 1.2 லட்சம் பணியிடங்கள் ரயில்வே துறையில் காலியாக உள்ளன. அதிலும் நுழைவு நிலைப் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் பயணிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
கேங்க் மென் மற்றும் டிராக் மென் பிரிவின்கீழ் 63,000 பணியிடங்களும், லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் பிரிவின் கீழ் 25,000 பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 40,000 முதல் 45,000 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதற்கான அடிப்படைத் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இதற்கு முன் ஐடிஐ சான்றிதழ் போதுமானதாக இருந்தது. இதற்கான வயது வரம்பு மேலும் இரண்டு வருடங்கள் தளர்த்தப்பட்டுள்ளதால் இதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தொடரும் ரயில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு இவ்வாறு பணியிடங்களை நிரப்பும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.