இனி எங்கும் டைப் செய்யலாம்!

கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் எளிமையாக டைப் செய்யும்
விதத்தில் டேப் என்ற புதிய கருவியை டேப் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்கள் கணினியில் டைப் செய்வதற்கு கீ போர்டுகளையும், திரையில் தேர்வுகளை செய்வதற்கு சுட்டிகளையும் பயன்படுத்தி வருவது வழக்கம். அதேபோல் ஸ்மார்ட்போன்களில் தொடுதிரை உதவியுடன் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.தற்போது அறிமுகமாகி உள்ள இந்த புதிய கருவியானது பயனர்களில் விரல் அசைவுகளை வைத்து அதனை எழுத்துக்களாக மாற்றம் செய்யும் வசதியுடன் உள்ளது.

இதன் பயன்பாடு குறித்த வீடியோ பதிவினை டேப் சிஸ்டம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கருவியானது பயனர்களின் விரல்களில் மாட்டிக்கொண்டு அவர்களின் தொடுதலை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுகிறது. இதில் ஒருமுறை டேப் செய்தால் குறிப்பிட்ட எழுத்துக்களைப் பதிவிடவும், இருமுறைக்கு சில எழுத்துக்களும், மேலும் குறிப்பிட்ட சில விரல் அசைவுகளுக்கு மற்ற எழுத்துக்களைப் பதிவிடவும் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் ப்ளுடூத் கொண்டு இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இந்த கருவியானது டைப்பிங் மட்டுமின்றி சுட்டியாகவும் பயன்படுகிறது. இதற்கென தனி ஒரு இடம் தேவை இல்லை. எளிதில் எங்கும் இதனைப் பயன்படுத்த முடியும் என டேப் சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Click here 
https://m.youtube.com/watch?v=W5J5mHdq_Bw&feature=youtu.be

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...