குழந்தையைப் பள்ளியில் சேர்க்க தடுப்பூசி!!!

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க
தமிழக அரசு பரிசீலித்து வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் – தமிழ்நாடு இடையிலான, தாய் சேய் நல திட்ட மேம்பாட்டு கூட்டுப் பயிற்சிக்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மகப்பேறு மற்றும் தாய் சேய் நல மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், சிங்கப்பூர் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் மருத்துவ நிபுணர்கள், அலுவலர்கள், பங்கேற்றனர்.

இதையடுத்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பள்ளிகளில் சேர்க்கை கிடைக்கும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதுபோன்று, தமிழகத்திலும் பின்பற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றை தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது” எனக் கூறினார்.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க ஆதார் மட்டுமின்றி தடுப்பூசி போட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. இதுபோன்று, கேரளாவிலும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...