வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

தமிழக அரசில் காலியாக உள்ள மோட்டார்
வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 113

பணியின் தன்மை: மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500/-

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் - ஆட்டோ மொபைல், டிப்ளோமா - மெக்கானிக்கல் துறையில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசி தேதி: 13.03.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201803MVI.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...