சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுதேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எதிர்காலத்தில் சிபிஎஸ்இ வினாத்தான் முன்கூட்டியே வெளியாகாதபடி தடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மறுதேர்வுகள் கடினமாக இருக்காது; மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்
