மக்களுக்கு முக்கியச் செய்தி: வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!

தொடர் விடுமுறை வருவதால் வரும் சனிக்கிழமை இரவு 8 மணி வரை அனைத்து வங்கிகளும் இயங்கும் என அகில இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30-ம் தேதி புனித வௌ்ளி ஆகியவைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்.1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2ஆம்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.
எனவே இடையில் மார்ச் 31ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை என வதந்திகள் பரவின. இதனால் மொத்தம் 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என கூறப்பட்டு வந்தது.


இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் வெளியிட்ட தகவலில்,
வரும் வியாழக்கிழமை (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமை (31) அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும். அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதியும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...