குரூப்-2 நுழைவுத் தேர்வு நாளை நுழைவுச் சீட்டு!!!

கடலுார்: மாவட்ட மைய நுாலகத்தில் குரூப்-2 பயிற்சி வகுப்பு
நுழைவுத் தேர்வுக்கான நுழைவு சீட்டு நாளை வழங்கப்படுகிறது.மாவட்ட நுாலக அலுவலர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் இயங்கும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வு மாவட்ட மைய நுாலகத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. நுழைவுத் தேர்வில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு நாளை (24ம் தேதி) மைய நுாலகத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...