தெளிவு பெறும் அரசு பள்ளி மாணவர்கள்; உதவி தொடக்க கல்வி அலுவலர் பெருமிதம்

ஊத்துக்கோட்டை : அரசு பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமின்றி,
பல்வேறு தகவல்களை பெற்று தெளிவு பெறுகின்றனர்' என, அரசு பள்ளியில் நடந்த மாணவர் படைப்பாற்றல் விழாவில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பெருமிதத்துடன் கூறினார்.
எல்லாபுரம் ஒன்றியம், அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர் படைப்பாற்றல் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை சிந்தாமணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் தமிழரசி, மோதிலால் ஆகியோர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மீனாதேவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பால்சுதாகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், அருகில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மீனாதேவி பேசுகையில், 'தனியார் பள்ளியில் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கற்பிக்கப்படுகிறது. விளையாட்டு போன்றவை தவிர்க்கப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளியில், விளையாட்டு மற்றும் நாட்டு நடப்புகள் கற்பிக்கப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளியில், ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது' என்றார்.இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் பேசியதாவது:
அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், டிஜிட்டல் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகளில், அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கக் கல்வி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, பேச்சு போட்டி, வினாடி வினா, கலைத் திருவிழா, தேசிய அளவில் செயல் திட்ட ஆராய்ச்சி உள்ளிட்ட போட்டிகளில் ஒன்றிய அளவில் பங்கேற்று, அரியப்பாக்கம் பள்ளி மாணவர்கள் பரிசுகள் பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், யோகாசனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...