சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் 8ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட
சுங்கச்சாவடிகளில் முழுவதும் பெண் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதற்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் முழுவதும் பெண்கள் சுங்கச் சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள ஏதேனும் ஒரு சுங்கச்சாவடி தேர்ந்தெடுக்கப்படும். அந்தச் சுங்கச்சாவடியில் பெண்கள் பகல் நேர ஊழியர்களாக அமர்த்தப்படுவார்கள். இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளில் பெண்களைப் பணியமர்த்தும் திட்டம் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும். இதுகுறித்து மண்டல அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.