டெல்லியில் இலவச வை-ஃபை திட்டம்!


இலவச வை-ஃபை திட்டத்திற்கு டெல்லி மாநில அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இலவச வை-ஃபை திட்டத்தை நிறைவேற்றி, நகரம் முழுவதும் இணைய வசதியை அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மார்ச் 22 அன்று டெல்லி சட்டசபையில் அம்மாநில நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் பேசிய அவர் டெல்லி முழுவதும் விரைவில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் கடந்த மார்ச்சிலேயே தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத குடியிருப்பகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1,500 கோடி நிதியை பட்ஜெட்டில் நிதியமைச்சரும், அம்மாநில துணை முதல்வருமான சிசோடியா ஒதுக்கியுள்ளார். இதற்கு முன்னரே 2016ஆம் ஆண்டில் வை-ஃபை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்த இயலாமல் தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...