பால் சேகரிப்பிற்கு புதியத் தொழில்நுட்பம்!


தேசிய பால் மேம்பாட்டு வாரியம், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையான செயல்பாடு மற்றும் பால் சேகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திலிப் ராத் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "விவசாயிகளிடமிருந்து தடையில்லாத பால் சேகரிப்பிற்கு மென்பொருள் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரியல்-டைம் பேசீஸ் முறையில் இந்தத் தகவல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தானியங்கி பால் சேகரிப்புத் திட்டத்தால் பால் கூட்டுறவுத் தொழில் மேம்பாடடையும். தற்போது போபாலில் உள்ள 48 கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்த தானியங்கி பால் சேகரிப்புத் திட்டத்தில் இணைக்கப்படுகிறது.

மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த பால் கொள்முதல் செயல்பாடுகளும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எளிதாகும். தற்போது ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. முந்தைய எல்லாப் பரிவர்த்தனைகளும் இனி ஏண்ட்ராய்டு செயலி மூலம் இயங்கும். தற்போது முதற்கட்டமாக உஜ்ஜெயின், இந்தோர் மற்றும் போபால் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் மத்தியப் பிரதேசம் முழுக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல, ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மற்ற சில மாநிலங்களிலும் இந்தத் திட்டம் விரைவில் கொண்டுவரப்படுகிறது" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...