ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு : எதிர்க்கட்சிகளுக்கு பழைய ஊதியம் தான்!!!


ஆளும்கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கு, இம்மாதம் உயர்த்தப்பட்ட புதிய சம்பளமும், எதிர்க்கட்சியினருக்கு, பழைய சம்பளமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


'தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம், 55 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியம், 12 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படும். 'தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடி ரூபாயில் இருந்து, 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்' என, 2017 ஜூலை, 19ல், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதிகாரம் கிடையாது:

தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு, நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால், புதிய சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.இந்த மாதம் முதல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், புதிய சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், எட்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது. தி.மு.க., - காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேச்சை, எம்.எல்.ஏ., தினகரன் ஆகியோர், தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் என, எழுதிக் கொடுத்தனர்.அதன் காரணமாக, அவர்கள் அனைவருக்கும், புதிய சம்பளம் வழங்கப்படாமல், பழைய சம்பளம் வழங்க உத்தரவாகி உள்ளது.


இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:சம்பள உயர்வு வேண்டாம் எனக்கூற, எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிகாரம் கிடையாது. அவர்கள், 'சம்பளத்தை விட்டுத் தருகிறேன்' என்று தான் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்படி, தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். அவரது கடிதத்தை, நிதித்துறை ஏற்றுள்ளது.

விளக்கம் கேட்கப்படும்

'தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, சம்பள உயர்வு வேண்டாம்' என எழுதி, ஒரே கடிதத்தில், தி.மு.க.,வினர் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இதை, நிதித்துறை ஏற்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக, சம்பளத்தை விட்டுத் தருவதாக, கடிதம் அளிக்க வேண்டும். தொழிலாளர் பிரச்னை தீரும் வரை என்றால், அதற்கான காலவரையறை என்ன என்ற, கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, தி.மு.க.,விடம் விளக்கம் கேட்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...