அழகூட்டும் வைட்டமின்கள்!


ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். வைட்டமின் பி நீரில் கரையக் கூடியது. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றைச் சாப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.

சிறுவயதிலேயே முதிய தோற்றம் ஏற்படுவதை தயமின் என்ற பி1 வைட்டமின் தடுக்கும். வைட்டமின் பி1 சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது.

தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2 பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ரேட் கிரகிப்புக்கு நியாசின் என்ற வைட்டமின் பி3 தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

சுழற்சியைத் தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது வைட்டமின் பி5 மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயைச் சரிசெய்ய உதவுவது முழு தானியங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும் பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6 ஆகும்.

கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெருகேறுவதற்கும் உதவுவது பயோடின் என்ற வைட்டமின் பி7 ஆகும். இவை பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, மெருகேற்றுவதற்கு போலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9 தேவைப்படுகிறது. இவை கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் இளநரையை தடுக்கவும் உதவுகிறது. இந்தச் சத்து பசலைக் கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

சருமத்தின் செல்களைப் புதுப்பித்து அழகுப்படுத்தும் வேலையை கோபாலமின் என்ற வைட்டமின் பி12 செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

உடலில் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளை பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும், எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது. அனைவருக்கும் மகிழ்ச்சி தின நல்வாழ்த்துகள் !

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...