பயனர்களின் தகவல்களை பாதிக்கும் ஃபேஸ்புக்!


உலகின் முதன்மை
சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை திருடுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் உலகின் பல்வேறு தரப்பு பயனர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்வி பலரிடம் எழுந்து வருகிறது. சமீபத்தில் பேஸ்புக் பயனர் ஒருவர் இதற்காக தகவல் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது அழைப்பு வரலாறு விபரங்கள் அனைத்தும் ஃபேஸ்புக் டேட்டாவில் தொடர்ந்து பதிவாகி உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.



ஆன்ட்ராய்டு பயனர்கள் புதிதாக ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர் அதில் கேட்கும் சில அனுமதிகளை பயனர்கள் வழங்கவேண்டும். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அப்ளிகேஷன்களுக்கு பயனர்களின் மொபைல் டேட்டாக்களை அணுகும் உரிமைகளை பயனர்கள் வழங்கி வருகின்றனர். அதிலிருந்து பயனர்களின் அழைப்பு விவரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தால் பயனர்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தகவல்கள் இவ்வாறு எடுக்கப்படுவதன் மூலம் ஆன்ட்ராய்டு பயனர்களின் தகவல்களுக்கு பெரும்பாலும் பாதுகாப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்களின் தகவல்கள் இவ்வாறு திருடப்படும் பட்சத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான தீர்வினை ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அறிவிக்க வேண்டும் என பல்வேறு பயனர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருகின்றனர். இதற்கு முன்னதாக பயனர்களின் தகவல்கள் நம்பத்தன்மை இல்லாத அப்ளிகேஷன்களால் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு நடவடிக்கையெடுக்கும் விதமாக கூகுள் நிறுவனம் அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்தது. எனவே இதற்கும் தீர்வினை கூகுள் நிறுவனம் வழங்குமா என பொறுத்திருந்து காண்போம். ஏனெனில் ஆராய்ச்சியின் முடிவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தகவல்களே அதிகம் திருடப்படுவதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...