வேப்பிலை இருக்க பயமேன்!


வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும்
மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமமாகச் சேர்த்து நீர்விட்டு அரைத்துப் பட்டாணி அளவில் மாத்திரைபோல் செய்து நிழலில் உலர்த்தி நாள்தோறும் மூன்று வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்துவர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்து ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் ஆகியவற்றில் கட்டினால் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டுவர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும். வேப்பிலை, எலுமிச்சைப்பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவெறி குணமாகும்.

வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்குப் பற்றிட குணமாகும். வேப்பிலையைப் பச்சையாகவும் வேகவைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிட்டுவந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக்கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம்பூ ரசம் பித்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...