வேலைவாய்ப்பு: தமிழக அரசில் உதவி பொறியாளர் பணி!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 324

பணியின் தன்மை: உதவி பொறியாளர்.

ஊதியம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100/-

கல்வித் தகுதி: பொறியியல் துறையில், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150ம், தேர்வு கட்டணமாக ரூ.200ம் செலுத்த வேண்டும்..

கடைசித் தேதி: 26.03.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201805cese_notfn.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...