தமிழ்த்தாய் வாழ்த்து : மனுவை ஏற்க முடியாது!


தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல் பாடலைப் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புளியந்தோப்பைச் சேர்ந்த தமிழாசிரியரின் மகனும், ஆட்டோ ஓட்டுநருமான ராமபூபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல் பாடலிலிருந்து பல பகுதிகள் நீக்கப்பட்ட பிறகே, தற்போது பாடப்பட்டுவரும் பாடலானது 1968ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு பாடலைத் திருத்துவது, மாற்றியமைப்பது, சிதைப்பது என்பது தமிழ்மொழியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்த மக்களையும் அவமதிக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத்தான் பாடவேண்டுமென அரசு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 23) நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ’கடந்த 50 ஆண்டுகளாக பாடப்பட்டுவரும் பாடலை அனைவரும் ஏற்று, மதித்து, மரியாதை செலுத்திவருகின்றனர். அப்படியிருக்கும்போது மறுபடியும் முன்பிருந்த பாடலைக் கொண்டுவந்தால் அதற்கு எதிராக சிலர் போராடுவார்கள்; எனவே இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது’ எனக் கூறி, மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...