பூமியின் உயர்தர புகைப் படங்களை அனுப்பிய INS -1C நானோ செயற்கைக்கோள்

பெங்களூரு : இஸ்ரோவால் உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோளான INS-1C யால் எடுக்கப்பட்ட புவி பரப்பின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. PSLV-C40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளில் உள்ள கேமரா ஜனவரி 16-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.INS-1C யால் எடுத்து அனுப்பட்ட புவி பரப்பின் புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயற்கைகோள் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் நிலப்பரப்பில் காடுகள் வாழ்விடங்கள் விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்து துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய நானோ செயற்கைக்கோள் (INS) தொடரில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...