தகவல் தொடர்பை இழந்த ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!


விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ செயற்கைக் கோளுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனை சரி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ இன்று (ஏப்ரல் 1) அறிவித்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக ‘ஜிசாட் 6ஏ’ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. மார்ச் 28ஆம் தேதி மதியம் 1.56 மணிக்கு ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட்டை விண்ணில் ஏவப்படுவதற்கான 27 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. கவுண்டவுன் முடிந்து மார்ச் 29ஆம் தேதி மாலை 4.56 மணிக்கு ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் கிரயோஜினிக் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் 6ஆவது செயற்கைக்கோள் ஆகும். இதே போல், இதைச் சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி இந்தியாவின் 12ஆவது ராக்கெட் ஆகும். 415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்தச் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மாலை 5.13 மணியளவில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் வாழ்நாள் 10 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜிசாட் 6 ஏ செயற்கைக் கோளுடன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...