புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த காலத்தில் பெறப்பட்ட சம்பளம் மற்றும் படிகள் அனைத்தையும் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ல் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்தது. எம்.பி.,யாக அவர் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை என விமர்சனம் இருந்தது. இருப்பினும் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியை அவர் சிறந்த முறையில் பயன்படுத்தினார்.
நாடு முழுவதும் 185 திட்டங்களுக்கு 7.4 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். கல்வி மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மேலும், ஆந்திராவில் உள்ள புத்தம் ராஜூ கந்திரிகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோஞ்சா கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், எம்.பி.,க்களாக இருந்த 6 வருடத்தில் பெற்ற சம்பளம் மற்றும் இதர படிகள் என கிடைத்த 90 லட்ச ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
இதனை அங்கீகரித்து பிரதமர் அலுவலகம் அளித்த கடிதம்: சச்சினின் இந்த சிறந்த செயல் மற்றும் நடவடிக்கைகளை பிரதமர் அங்கீகரித்துள்ளார். இந்த நிதி பேரிடர் காலங்களில் அவதிப்படுபவர்களுக்கு உதவும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.