காலை வேளையில் எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமலோ, கால் தாங்கலாகத்தான் நடக்க வேண்டிய சூழலோ ஏற்பட்டிருக்கலாம். ஏதோ ஓரிரு நாள் என்றால் பரவாயில்லை. அடிக்கடி ஏற்படுவது ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு நோயாக இருக்கக்கூடும். மூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கடும் வலியை உண்டாக்குகிறது.
மூட்டுவலி ஏற்பட சில காரணங்கள்:
ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.
• கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)
• டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்) - முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.
• பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்.
• கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.
• எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் -இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
இவ்வாறாக பலவகைகளில் ஏற்படும் மூட்டுவலிக்கு இயற்கையிலேயே மருந்துகள் உள்ளன.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
காரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.
பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.
முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்..
புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.
முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.
குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையும்.
அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.
எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.
காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி & எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
நோயின் தன்மை, குணம்பொறுத்து அன்றைய நாட்களில் னம் முன்னோர்கள், அல்லது வைத்தியர்கள் நிவாரண வழிமுறைகள் சொல்வதுண்டு. தற்போதும் சில இடங்களில் இயற்கையான மருத்துவ முறைகள் உள்ளன. தகுந்த ஆலோசனையின் பேரில் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளுதல் நலம்.
