புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை!


பேரணு புற்றுநோயாளிகள் 10 பேருக்குப் புதிய வகை அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் மருத்துவர் ஜெயந்தி கூறுகையில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எலும்பு புற்றுநோய்க்கு நவீன அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்த நவீன அறுவை சிகிச்சை இங்குதான் நடைபெற்றிருக்கிறது.

எலும்பில் ஏற்படும் பேரணு புற்றுநோய் பாதிப்பால் உடலில் கட்டிகள் உண்டாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றியபின், நோயாளிகளுக்கு ஏற்ப செயற்கை மூட்டு பொருத்தப்படும். இந்த நோய் பெரும்பாலும் 20 முதல் 40 வயதுடையவர்களை அதிகமாகத் தாக்கும். மேலும், இந்தச் சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.



இந்தப் புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினாலும், 10 முதல் 35 சதவிகிதம் வரை மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது. ஆனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதற்காக அதிநவீன சிகிச்சை முறையில் எலும்பு தேய்மானம் கட்டுப்படுத்தப்படும். பிறகு ஊசிப் போடப்பட்டு, மூன்று வாரங்களில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படும்.

மேலும், அவ்விடத்தில் பிபுலா என்ற சிறிய கால் எலும்பின் மூலம் நிரப்பப்படும். இதன்மூலம் மீண்டும் அந்தப் புற்றுநோய் தாக்கும் அபாயம் குறையும். இந்த முறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை முடநீக்கியல் துறை பேராசிரியர் சிங்காரவடிவேலு தலைமையிலான மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த புதிய சிகிச்சை முறை தொடர்பான தகவல்கள் உலக அளவில் நடைபெறும் மருத்துவக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...