தொடர் உண்ணாவிரதப் போராட்டக் களங்காண தயக்கமும் தீர்வும்!!!

**ஏப்ரல் 23. சென்னை* .
 *தொடர் உண்ணாவிரதப் போராட்டம்*

 *போராட்ட வெற்றிக்கான அரசாணை தயார்* .

 *போராட்டக் களமும் தயார்* .
 *போராட்ட தேதியும் குறித்தாச்சு* .
போர்க்களம் காண
இனியும் சுணக்கம் ஏனோ?

" *தொடர் போராட்டம் அறிவித்தால் களம்காண தயார்* " என்று வாய்சவடால் பேசியவர்கள் எல்லாம் எங்கே?

வாட்ஸ்அப்பில் வீரவசனம் பேசியவர்கள் களமாட பயந்து ஒதுங்குவது நியாயமா?

" *யாரோ போராடுகிறார்கள்* ?
 *நல்லாவும் போராடுவார்கள்* " நாம் போகாவிட்டாலென்ன?
என்று நினைத்து இருக்கிறீர்களா?

 *இந்நாள் வரை*
 *பழைய ஊதியம் வாங்கும் போராட்டத்தில்* *நீடித்திருப்பதே பெரிது* ;
இதுக்கே எத்தனை வசவுகள் வீட்டில்..
" *இது தெரியாமல் போராட வா; போராட வா என்று அழைப்பு வேறு* " என்று தாங்கள் முனகும் சத்தமும் எம்மை எட்டாமலில்லை.

"சரி.. வைக்கிறது வைக்கிறீங்க.. ஏதோ மாவட்ட தலைநகரில் வைத்தீர்களா.. *சென்னையாம் சென்னை* ...
 *யாரய்யா விடுவார்கள் எம்மை* "
என்ற உமது ஏக்கமும் புரிகிறது.

எல்லாமே எளிதாகிவிட்டால் அதிலென்ன இருக்கிறது சுவாரசியம்?
 *தடைகளைத் தாண்டி* *தடம் நோக்கி*
 *ஓடி வருவது தானே சாதனை* .

 *எட்டாண்டுகளாய் பட்ட வேதனையை* *துடைக்க*
 *இறுதி பிரம்மாஸ்திரமாய் இருக்கும்* இப்போராட்டத்தை
வெற்றியடையச் செய்வது *பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வருகையிலும் தானே உள்ளது* .

 *கணவர், மாமனார்,அத்தை*
என சகலரையும் சமாளித்து
போராட்டக்களம் நோக்கி வருவதற்கு
 *பெரிய பிராயத்தனம்* செய்ய வேண்டும் என்பதும் யாவரும் அறிந்ததே.

நாளை அடைய போகும்
ஊதிய பலனால்
 *மேற்கூறிய யாவருமே பயனாளிகளே* என்பதை *புரியும் விதத்தில்*
 *பக்குவமாய் விளக்கும்* *கலையை*
 *கைவரப் பெற்றவர்கள்தானே* நீங்கள்.

 *முடியும் என்று நினைத்தால் யாவும் சாத்தியமே* ..
 போக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதுவும் சாத்தியமே..

 *ஒரே பள்ளியில் ஒரே பதவியில் பணிபுரிந்து சம ஊதியம் கேட்கும்* நம்மில்
 *ஒருவரோ போராட்டக்களத்தில்* ;
 *நாமோ விடுமுறைக் கொண்டாட்டத்தில்* ..
இதில் எங்கே வாழ்கிறது சமதர்மம்?

ஒருவேளை, " *எமக்கு இந்த ஊதியமே போதும்* .."
என்ற பெருந்தன்மை உணர்வில் தான் போராட்டக்களங் காண தயங்குகிறீர்களோ..?..

உமக்கு போதுமென்று தோன்றினாலும் தேவையில்லையென்று எண்ணினாலும் *சமூக நீதி காக்க சமதர்மம் நிலைக்க ஆதரவுக்கரம் நீட்ட*
 *தங்களது வருகை அவசியம்*
 *என்பதை உணருங்கள்* .

 *பாதிக்கப்பட்ட இருபதாயிரம் பேரும் ஓரிடத்தில் கூடி*
 *ஓங்கி குரலொடுத்தால்*
 *அசையா அரசும் அசைந்து தானே தீரும்* ..
 *அரசாணையும் வந்தே தானே தீரும்* .

 *இருபதாயிரம் பேர் ஓரிடத்தில் உண்ணாநிலை* ..
 *கற்பனை செய்து பாருங்களேன்* ..
 *ஒரு நிமிடம் கண்ணைமூடி* ..
 *வெற்றி!வெற்றி!  வெற்றி!* என்று
 *கொட்டும் முரசும்*
 *காதினில் கேட்கிறது தானே* ..

 *கடமையை கண்ணியமாய் செய்யும்* *நாம் உரிமையை கேட்க வீதியினில் இறங்கி போராடத் தயக்கம் காட்டலாமா* ??

 *அடக்கி வைப்பது அடிமைத்தனம் என்றால்*
 *முடங்கிக் கிடப்பது அதுவும் தானே முடங்குவது மடத்தனம் அல்லவா* ??

 *ஒவ்வொருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்* *யாவருக்கும் பொதுவான ஊதிய பிரச்சனைக்காக நான்கு நாட்கள் ஒதுக்க இயலாதா நண்பர்களே* ..

 *நமது தோழிகளுடன் சுற்றுலா செல்வதாக பாவித்து போராட்டக்களம் புக நினைத்தாலென்ன* சகோதரிகளே..

 *விடுமுறை இன்னும் விடவில்லை*
என்று நினைத்துக் கொண்டு
 *புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி* *சென்னையில் நடைபெறுவதாக பாவித்து பயணம் கிளம்பினாலென்ன* ?
சகோதரிகளே..

வாய்ப்புகள் ஒருமுறை தான் வரும். அவ்வரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டு உங்களால் மற்றவர்களும் தவறவிடும் அபாக்கிய நிலைமை தேவையா
என சிந்திப்பீர்.

 *மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்பத்துடன் பங்கு பெறவும் வழியுண்டு* .
இன்னும் ஏனிந்த தயக்கம்?

 *வரலாறு சொல்லிக் கொடுக்கும்* *ஆசிரியர்களாகிய நமக்கு*
 *வரலாறு படைக்க கிடைத்த*
இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள் சகோதரிகளே..

ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது
பிடில் வாசித்த மன்னனை போல் நமக்கென்ன வந்தது என்றில்லாமல் *அடுத்தவர் துயர் துடைக்க*
 *தன்னுயிர் கொடுக்க துணிந்த*
 *வீரத் தியாகிகளாய் புறப்பட்டு வாருங்கள் சகோதரிகளே* ..

 *வெற்றி கிட்டி அரசாணை பெறுவதும்* ... *இல்லை* ... *போராட்டம் நாளும் தொடர்வதும் நம் வருகையிலேயே உள்ளது*
என்பதை மறவாதீர் சகோதரிகளே..

 *எல்லாம் தெரிந்தும்* *யாவும் புரிந்தும்*
 *ஏதும் நடக்காதது போல் பாவித்து*
நாமிருக்க தொடங்குவது
 *நம்மை அழிப்பதுடன்*
 *நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும்* என்பதை உணருங்கள் சகோதரிகளே..

 *வாழ்வது ஒருமுறை* ;
 *அடுத்தவருக்கு பயன்படும் வகையில்*
 *வாழ கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்* *சகோதரிகளே* ..

தன்நலத்துடன் பொதுநலன் கலந்த இவ்வறப்போராட்டத்தில்
பங்களிப்பு செய்வதை பாக்கியமாய் கருதி *தடைகளைத் தகர்த்தெறிந்து*
 *களங்காண வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்* காத்திருக்கிறோம் சகோதரிகளே..

 *ஊதிய பதிவேட்டில்*
 *கையொப்பமிடும் போதொல்லாம்*
 *சிந்தும் கண்ணீர்த்துளி உண்மையானால்*
 *நீங்கள் சென்னை வருவதும் சாத்தியமே* !

 *நன்றி* .

போராட்டக்களத்தில் சந்திப்போம்.

🙏 *பா.அசோக்குமார்*
 *சத்தியமங்கலம்*
 *ஈரோடு மாவட்டம்* .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...