தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ மாணவியரின் செல்போனிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 3,608 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து 96 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 5 திருநங்கைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் இந்த ஆண்டு 2,794 தேர்வு மையங்களுடன் கூடுதலாக 237 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.