மே 15இல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!


தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வருகிற 15ஆம் தேதி 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனியாக ஒரு துறை அமைப்பது, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்தே விநியோகிப்பது உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...