புதுடில்லி: உலக அளவிலான செல்வநிலை மதிப்பீட்டில், இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.
டாப் '3'
இதுகுறித்து ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 19, 522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா '6':
நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது.
சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா (6,393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6,142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6,649 பில்லியன் டாலர்கள்) , இத்தாலி (4,276 பில்லியன் டாலர்கள்) இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
200 சதவீத வளர்ச்சி
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சிக்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப்பட்டியலில் 4 அல்லது 5வது இடத்தில் இந்தியா இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.