'அனுமதியின்றி, மருத்துவ விடுப்பில் செல்லும்
போலீசாருக்கு, சம்பளம் நிறுத்தப்படும்' என்றஅறிவிப்பு, போலீசாரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக, அரசு மருத்துவமனைகளில், வெளிப்புற நோயாளி களாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். உரிய பரிசோதனைக்கு பின், சிகிச்சை அளித்த டாக்டரின் அறிவுரைப்படி, மருத்துவ விடுப்பு அளிக்கப்படும்.
தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, 'டாக்டரின் அறிவுரைப்படி மட்டும், மருத்துவ விடுப்பு அளிக்க முடியாது;
ஆர்.எம்.ஓ., என்ற, நிலைய மருத்துவ அதிகாரி கையெழுத்து பெற்று வந்தால் தான், மருத்துவ விடுப்பு வழங்கப்படும்' என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், 'மருத்துவ விடுப்பில் செல்லும் போது, உயர் அதிகாரிகள் அனுமதியுடன் தான் செல்ல வேண்டும். விடுப்பு முடிந்து பணியில் சேரும்போது, கண்காணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும்.
'அனுமதியின்றி, மருத்துவ விடுப்பில் செல்லும் போலீசாரின், மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: ஆர்.எம்.ஓ., எந்நேரமும் மருத்துவமனையிலேயே இருப்பார் என, கூற முடியாது. அவரிடம் கையெழுத்து பெற தாமதமானால் கூட, உயர் அதிகாரிகள், மருத்துவ விடுப்பு அளிக்க காலதாமதம் ஏற்படும்.
மேலும், அனுமதியின்றி மருத்துவ விடுப்பு எடுத்தால், சம்பளம் நிறுத்தப்படும் என்பதும் சரியானது அல்ல. மருத்துவ விடுப்பு எடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.