அன்றாட சமையலில் எப்படியேனும் இஞ்சியை சேர்த்துவிடுகிறோம். ஆனால் அதற்கென முக்கியத்துவம் கொடுத்து தனியே சாப்பிடுவதில்லை.
மன அழுத்தமோ,கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடான ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலைகள் காணாமல் போய்விடும்.
அதேபோல் மன அழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கின்றது.
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகின்றன,
இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.
இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத்துண்டு ஒன்றைப் பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அழுத்தினால் பெரிய அளவுக்கு ஆசுவாசம் கிடைக்கும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.
துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கின்றன.
இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைபிடிப்பைப் போக்கவும் இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின் மீது வைத்துக்கொண்டால் பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி, நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச்செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கும்.
மலச்சிக்கல், அழற்சி,சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு ரத்த சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தால் அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் கொடுக்கும்.
