தேசிய அலுமினிய நிறுவனத்தில் (NALCO) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பொறியாளர்
பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெட்டல்லர்ஜி அல்லது அதன் தொடர்புடைய பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கேட் (GATE 2018) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 22.05.2018
கட்டணத் தொகை: பொதுப் பிரிவினருக்கு ரூ.500/-, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
மேலும் விவரங்களுக்கு NALCO இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
