எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான ஜிப்மர் நுழைவுத் தேர்வு: நாடு முழுவதும் 1.54 லட்சம் பேர் எழுதினர் !!

புதுச்சேரி உள்ளிட்ட 291 மையங்களில் ஜிப்மர் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 200 இடங்களுக்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வெழுதினர்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிப்புக்கு புதுச்சேரியில் 150, காரைக்கால் கிளையில் 50 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதற்கு

புதுச்சேரியில் இருந்து 1,925 பேர் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 1,97,751 பேர் விண்ணப்பித்திருந்தனர்.



இதற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு புதுச்சேரியில் 7 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் நேற்று காலை, மதியம் என இருவேளை நடைபெற்றது.
இதில் காலை 81,886 பேர், மதியம் 72,605 பேர் என மொத்தம் 1,54,491 பேர் தேர்வெழுதினர்.



 விண்ணப்பம் செய்தவர்களில் மொத்தம் 78.1 சதவீதம் பேர் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் வரும் 20-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.



 முதற்கட்ட கலந்தாய்வு இம்மாத இறுதிக்குள் நடைபெறும். முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜுலை 4-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாக ஜிப்மர் தரப்பில் குறிப்பிட்டனர்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...