48,600 பேரை வெளியேற்றிய ரிலையன்ஸ்!


இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியது. இதன் விளையாக சுமார் 94 சதவிகிதம் ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தனது தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கத் தொடங்கியது. 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் அழைப்பு சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வந்த இந்நிறுவனம் நாளடைவில் கடும் வருவாய் இழப்பைச் சந்திக்கத் தொடங்கியதோடு பெருத்த கடன் சுமைக்கும் ஆளானது. மேலும், சந்தையில் புதிதாகக் களம் கண்ட தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பிறகு ஏற்பட்ட கடும் போட்டியால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தொழில் முடங்கியது. இதனால், 2017 டிசம்பர் மாத இறுதியில் தனது 2ஜி, 3ஜி மற்றும் அழைப்புச் சேவைகளை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்தது. ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 4ஜி சேவைகளை மட்டும் தற்போது வழங்கி வருகிறது.

சந்தையில் நிலவும் போட்டியிலிருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளதாகக் கூறும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தற்போது 3,400 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்பு அந்நிறுவனத்தில் மொத்தம் 52,000 பேர் வரையில் பணியாற்றி வந்தனர். தற்போது அதில் 94 சதவிகிதம் அளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது. எனவே, தனது தொலைத் தொடர்புச் சொத்துகளை ரிலையன்ஸ் ஜியோவிடம் விற்பனை செய்து கடனைக் குறைக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முன்னதாக ஏர்செல் நெட்வொர்க்குடன் இணைவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...