இந்தியாவின் 4 வயது எழுத்தாளர்!


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அயன் கோகோய் கோஹன் என்ற நான்கு வயது சிறுவன் ‘இந்தியாவின் இளம் எழுத்தாளர்’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார்.

அசாம் மாநிலம் வட லக்ஷ்மிபூரைச் சேர்ந்த அயன் கோகோய் கோஹன் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். தற்போது இவர் அதே பகுதியில் இருக்கின்ற செயின்ட் மேரிஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

அயனின் தாத்தா சங்கீதா கோகோய் கோஹன் கூறுகையில், “அயன் ஒரு வயது முதலே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டான். அவன் மூன்று வயதைக் கடந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகளை எழுதவும் ஆரம்பித்துவிட்டான்” என்று தெரிவித்தார்.

அயன் கடந்த ஜனவரி மாதம் ‘தேன்கூடு’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார், புத்தகத்தின் விலையானது 250 ரூபாய் ஆகும். 80 பக்கங்களைக்கொண்ட இந்தப் புத்தகத்தில் 30 உண்மை நிகழ்வுகள் பற்றிய கதையும் மற்றும் 30 நிகழ்வுகளுடன் இணைந்த விளக்கப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...