பொதுத்துறை நிறுவனமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 64
பணியின் தன்மை: நிர்வாக பயிற்றுநர்
கல்வித் தகுதி: 65 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., / பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியுடன் கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.7.2017 தேதிப்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.6.2018.
மேலும் விவரங்களுக்குwww.posoco.in என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
