மதுபானங்கள் அருந்தும் போது சாப்பிடக்கூடாத உணவு வகைகள்


நம் நாட்டில் மது பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகம். சிலரால் தினமும் மதுபானம்
அருந்தாமல் இருக்க முடியாது. மதுபானங்களை அருந்தும் போது அனைவரும் சில உணவுகளையும் சேர்த்தே அருந்துவர். மதுவை மட்டும் அருந்தினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் மற்றும் மது அருந்துவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதை சீர் செய்யவும் சைட் டிஷ்ஷாக சில உணவுகளையும் சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடும் உணவின் போது சில உணவு வகைகளை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு சாப்பிடக்கூடாத உணவுகள் சில.

முந்திரி

மது அருந்தும் போது முந்திரி உணவு வகைகளை சாப்பிடக் கூடாது. முந்திரியை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். அதனால் உணவு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும்.

குளிர் பானங்கள்

பலர் மதுவுடன் குளிர் பானங்களை கலந்து தான் அருந்துவர். அவ்வாறு அருந்துவதால் உடலுக்கு தேவையான தண்ணீரின் அளவு குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சி போன்ற சிட்ரஸ் பழங்களை மதுவுடன் சேர்த்து உண்ணக் கூடாது. வாழைப்பழத்தை மதுவுடன் சேர்த்து உண்பது நல்லது. சிட்ரஸ் பழங்கள் உணவுகளின் செரிமானத்தை பாதிக்கும்.

மது அருந்தும் போது வறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் உணவு வகைகளை சேர்த்துக் கொண்டால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...