துணிச்சலும் புத்திசாலித்தனமும் கொண்ட பறவை!!!


துணிச்சலும் புத்திசாலித்தனமும் கொண்ட பறவை!
தினப் பெட்டகம் – 10 (23.06.2018)

மிகவும் வலிமையான பறவைகளில் ஒன்றான கழுகைப் பற்றிய தகவல்கள்:

1. கழுகுகளுக்குக் கண் பார்வை மிகவும் கூர்மையானது. இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் இரையைக்கூடக் காணும் திறன் கொண்டவை.

2. கழுகுகள் பல வகைப்படும். அவற்றில் மிகவும் சிறியது, சராசரி 45-55 செ.மீ அளவு வளரக்கூடிய little eagle என்ற வகை. Stellar’s Sea Eagle என்ற வகை 91 முதல் 106 செ.மீ வரை வளரக்கூடியவை.

3. கழுகுகளுக்கு இருக்கும் உணர்வுகளில் மிகவும் நுட்பமானது பார்வைத் திறன். கழுகின் தலையில் 50% அதன் கண்கள்தான். மனிதனைவிட ஐந்து மடங்கு தெளிவாகவும், துல்லியமாகவும் பார்க்கக்கூடியவை கழுகுகள். நம் கண்களால் மூன்று வண்ணங்களைத்தான் பார்க்க முடியும், ஆனால், கழுகுகளால் ஐந்து வண்ணங்களைப் பார்க்க முடியும்.

4. பெரும்பாலான கழுகு வகைகளில், பெண் கழுகுகள் ஆண் கழுகுகளைவிட வலிமையானவை.

5. பல மணிநேரம் வரை, ஒருமுறைகூடச் சிறகை அசைக்காமல் பறக்கக்கூடியவை கழுகுகள்.

6. உலகத்தில் எடை அதிகமான கழுகு, Stellar’s Sea Eagleதான். ஒன்பது கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டவை அவ்வகை கழுகுகள்.

7. கழுகுகள் மிகவும் புத்திசாலியான பறவைகள். ஆமைகளை உண்பதற்கு உயரத்திலிருந்து ஆமையைப் பாறை மீது போட்டு அதனுடைய ஓட்டை உடைத்துச் சாப்பிடுமாம்.

8. குதிரைகள் போலவே கழுகுகளும் நின்றுகொண்டு உறங்கும்.

9. இறக்கையில் 7000க்கும் அதிகமான இறகுகள் இருக்கும். கழுகின் எடையில் 5% அவற்றின் இறக்கைகள்.

10. ஏறத்தாழ அனைத்துப் பறவைகளுமே பறக்கும்போது பின்னால் வேறு பறவை ஏதேனும் துரத்துகிறதா என்று திரும்பிப் பார்ப்பது இயல்பு. ஆனால், கழுகு மட்டும் அப்படிச் செய்யாது. தன்னை வேட்டையாடும் துணிச்சல் வேறு பறவைகளுக்கு இல்லை என்று நினைப்பு போலும்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...