எல்லோருக்கும் பொதுவான, அருகமைக் கல்வி என்ற பெரிய நியாயத்திற்கான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும் !!

கல்வியையும், ஜனநாயகத்தையும் அதிகார வர்க்கம் சீரழிக்கிறது
டாக்டர் வே.வசந்திதேவி குற்றச்சாட்டு


தமிழகத்தில் கல்வியையும் ஜனநாயகத்தையும் அதிகார வர்க்கம் சீரழித்து வருகிறது. குழந்தைகளின் கல்வி உரிமையை மீட்க மக்களிடம் கல்விக் களப்பணியாற்ற ஊருக்கு பத்துபேர் இயக்கமாக திரளவேண்டும் என்றுமுன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.வசந்தி தேவி
கேட்டுக்கொண்டார்.“மக்கள் அதிகாரம்’’ என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிறன்று (ஜூன் 2) பள்ளிக் கல்விபாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு-புதுச்சேரி சார்பில் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வசந்திதேவி பேசியதாவது:போட்டிகள் நிறைந்த உலகத்தில்ஒருவரை ஒருவர் வெல்ல நினைக்கின்றனர். ஆனால் கல்வியில் போட்டி என்பதே இருக்கக்கூடாது. வளர்ந்த நாடுகளில் கூட பள்ளிக்கல்வியில் சமத்துவம் இருக்கிறது.

இந்தியாவில் கல்வி உரிமைச்சட்டம் மறுக்கப்படுகிறது. பல்லாண்டு போராட்டங்களுக்குப் பிறகு கல்வி உரிமைச்சட்டம் 2009நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நாடு முழுவதும்10 விழுக்காடு பள்ளிகள் தான் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய- மாநில அரசுகள் பொறுப்பற்று அதிகார வேட்கையோடு இருக்கும் போது சட்டம் குறித்த புரிதல் மக்களிடையே முற்றிலும் இல்லாத அவலநிலை உள்ளது.பள்ளி மேலாண்மைக்குழுகல்வி உரிமைச்சட்டம் , அனைத்துஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மேற்பார்வை பார்க்கும் அதிகாரமும், பள்ளிக்கு வேண்டிய திட்டமிடும் அதிகாரமும் பள்ளி மேலாண்மைக் குழுவிடம் தான் அளித்திருக்கிறது. இதில் குழு உறுப்பினர்களில் 75விழுக்காடு பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்க வேண்டும், சரிபாதி பெண்கள் இருக்கவேண்டும், ஒடுக்கப்பட்ட, நலிந்த பிரிவினர் சேர்க்கப்படவேண்டும், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர், கல்வியாளர், இரண்டு உள்ளாட்சி உறுப்பினர்கள்அடங்கிய குழுவாக இருக்கவேண்டும்.

குழுவின் அதிகாரம்பள்ளிக்கு அனைத்துத் தேவைகளும் இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்து, அரசு அதிகாரிகளை வற்புறுத்தி அவற்றைப்பெற வேண்டும். பள்ளி மேம்பாட்டுத் திட்டம்தயாரித்தல், அரசு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வேறு வகைகளில் இருந்து வரும் நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுவதைக் கண்காணித்தல் வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யவேண்டும், மாணவர்கள் வகுப்பிற்குரிய கற்றல் திறன் பெறுவதை கண்காணிக்க வேண்டும்.ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறை, சுகாதாரம் , குடிநீர், கழிவறை வசதி,விளையாட்டு மைதானம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் வேண்டும்.ஒவ்வொரு ஊர் பள்ளியிலும் இந்த அடிப்படைகள் இருக்கின்றனவா என்பதைப் பள்ளிமேலாண்மைக்குழு உறுதி செய்யவேண்டும்.

பள்ளிகளை மேம்படுத்துவதில் கிராம சமுதாயத்தின் பொறுப்பு கூடுதலாக உள்ளது. ஆனால் கல்விப்பிரச்சனைகள் குறித்து கிராமசபைக் கூட்டங்களில் கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சமுதாயத்தின் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் குழந்தைகளுக்கு இந்த இயக்கம் முதல் முன்னுரிமை அளிக்கும். ஏனெனில் அவர்களது பள்ளிகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் ஊக்குவிக்கும் நோக்கோடு தனி கவனம் அளிக்கப்படும்.களப்பணியாளர்கள்பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் லட்சியங்களையும், குறிக்கோள்களையும் , திட்டங்களையும் உள் வாங்கிக் கொண்ட களப்பணியாளர்களை ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப்புறங்களில் ஒவ்வொரு பள்ளிக்கும் அடையாளம் காணும் முயற்சி தொடங்கும், ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர், அரசு ஊழியர், இளைஞர், மாணவர் அமைப்பினர் ஆகியோரே களப்பணியாளர்களாக இயங்குவர். இதில் பெண்கள் முன்னிறுத்தப்படுவது அவசியமாகும்’.

இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தினார். தாம் இந்த இயக்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் செயலாளராக ஜெ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட90 பேர் கொண்ட செயற்குழு தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.தற்போதைய அரசியல் சூழலில் சின்ன நியாயங்களுக்கு பெரிய குரல்கள் எழுப்பப்பட்டுவருகிறது. எல்லோருக்கும் பொதுவான, அருகமைக் கல்வி என்ற பெரிய நியாயத்திற்கான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும் என பேராசிரியர் மாடசாமி கேட்டுக்கொண்டார். இயக்கச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஆர்.உதயலட்சுமி, எஸ்.உமாமகேஷ்வரி, சு.மூர்த்தி, மாதவன், சுடர்நடராஜன், ரெ.சிவா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.முன்னதாக இந்த ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சியை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் துவக்கி வைத்தார். பேராசிரியர் ஆர்.காளீஸ்வரன் வாழ்த்திப்பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...