கடலில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதில், முக்கியமாக பிளாஸ்டிக் பைகளைப் போடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகக் கருதப்படுவது, கடல்வாழ் உயிரிகள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகிறது. அதிலும் திமிங்கலம், சுறா போன்ற பெரிய பெரிய மீன்கள். காரணம், ஜெல்லி ஃபிஷ் மாதிரி அவற்றின் கண்ணுக்குத் தெரியுமாம். அந்த ஜெல்லி ஃபிஷ் பற்றி பார்க்கலாம்...
1. ஜெல்லி ஃபிஷ்ஷில் பல வகை உண்டு. சிலவற்றிற்கு ஒளிரக்கூடிய தன்மையுள்ள உறுப்புகள் இருக்கும். இரையைப் பிடிப்பதற்கும் எதிரியிடம் இருந்து தப்பிப்பதற்கும் இது பயன்படுகிறது.
2. ஜெல்லி ஃபிஷ்ஷுக்கு மூளை கிடையாது. மாறாக, நரம்பு வலைகள் போன்ற அமைப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், தகவல் பரிமாற்றத்திற்கும் இவை பயன்படுகின்றன.
3. அனைத்துக் கடல்களிலும் சில குளங்கள், ஏரிகளில்கூட ஜெல்லி ஃபிஷ் வாழ்கிறது.
4. ஒரு ஜெல்லி ஃபிஷ்ஷை இரண்டாக வெட்டினால், ஒவ்வொரு துண்டும் தனித்தனியாக வளரும் தன்மை கொண்டது. பல்லியின் வாலை வெட்டினால் மீண்டும் வளருமே, அது மாதிரி. ஆனால் ஒரு வித்தியாசம், பல்லியின் துண்டிக்கப்பட்ட வால் வளராது, ஆனால் ஜெல்லி ஃபிஷ்ஷுக்கு இரண்டுமே தனித்தனியாக வளர்ந்துவிடும்.
5. அதன் உடம்பிலிருந்து ஒரு சிறு குழாய் போல ஒன்று தொங்கும். அதன் வழியாகத்தான் உணவை உள்ளிழுத்து வெளியேற்றுகிறது.
6. ஜெல்லி ஃபிஷ்களுக்கு எலும்புக்கூடு கிடையாது. அவற்றின் உடம்பில் 95% நீர்தான். நீருக்கு வெளியில் அவற்றால் சில வினாடிகள்தான் வாழ முடியும்.
7. ஜெல்லி ஃபிஷ்ஷுக்கு பல tentacle இருக்கும். அவை கொட்டிவிடும். இதில் சிறப்பு என்னவென்றால், அவற்றைத் துண்டித்தாலும், அதன் பிறகும் கொட்டுமாம்.
8. 650 மில்லியன் வருடங்களாகக் கடலில் வாழும் ஒரு உயிரினம், ஜெல்லி ஃபிஷ். உலகிலேயே பழைமையான பல்லுறுப்பு உயிரி அதுதான்.
9. ஏறத்தாழ 2000 வகையான ஜெல்லி ஃபிஷ் இருக்கிறதாம். கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் 3,00,000 வகை இருக்கலாம்.
10. ஜெல்லி ஃபிஷ், மீன் வகையைச் சார்ந்தது அல்ல. மிதக்கும் உயிரிகளான plankton குடும்பத்தைச் சார்ந்தவை. ஆனாலும், ஜெல்லி ‘ஃபிஷ்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
- ஆஸிஃபா
