இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் வாழ்த்து

கிண்டி : சதுரங்க விளையாட்டில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தா இன்று குடும்பத்துடன் ஆளுநரை
சந்தித்து வாழ்த்து பெற்றார். இத்தாலியில் நடைபெற்ற கிரெடின் ஓபன் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவன் பங்கேற்று இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். இந்நிலையில் இத்தாலியிலிருந்து சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா இன்று குடும்பத்துடன் கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.



ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நினைவு பரிசு வழங்கி மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா குடும்பத்தினருடன் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...