ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு!!



*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள மேல்காரணி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வீட்டிலிருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.*

பள்ளிக்கு வந்த மாணவர்களை, SMC உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர். *மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் திரு.பொ.சிவக்குமார்* அவர்களின் வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர் *திரு.ரே. ஏழுமலை* அவர்களும் உதவி ஆசிரியை *திருமதி.பொ.மாலதி* அவர்களும் *SMC உறுப்பினர்களும்* கலந்து கொண்டு வாகனத்தில் ஊர்வலமாக வரவேற்பளித்த நிகழ்வு பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...