வீட்டுக் கடன்: 93% பேர் அச்சம்!


வீட்டுக் கடன்களை வெறும் 7 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே எளிதாகப் பெறுவதாகக் கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.

வீடமைப்பு நிதியுதவிச் சந்தையில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், வெறும் ஏழு விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வீட்டுக் கடன் பெறுவது எளிதாக அமைவதாக ஆய்வறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. வட்டி விகிதம் உயர்வது ஒரு பிரச்சினையாக இருந்தாலும்கூட, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதாலும், கடனைப் பெறுவதற்கான செயல்முறைகள் கடினமாக இருப்பதாலும், கடன் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர். சொத்து விவகாரங்கள் தொடர்பான இணையதளமான மேஜிக்பிரிக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வீட்டுக் கடன் பெறுவது குறித்தும், கடனைப் பெறுவதற்கான செயல்முறைகள் குறித்தும் 93 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அச்சப்படுவதாகத் தெரிகிறது.

45 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்துவரும் வட்டி விகிதங்கள் வீடு வாங்க முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகமாக இருப்பது 27 விழுக்காட்டினருக்குத் தொல்லை கொடுப்பதாக இருப்பதாகத் தெரிகிறது. கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் கடினமாக இருப்பது 21 விழுக்காட்டினருக்கு மிகப்பெரும் தொல்லையாக இருக்கிறது. வெறும் 7 விழுக்காட்டினருக்கு மட்டுமே வீட்டுக் கடன் பெறுவது எளிதாக இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

கடன் பெறுவோர் அக்கடனைச் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வதிலேயே வங்கிகளும் கவனம் செலுத்துகின்றன. எனினும், கடன்களை முறையாகச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்கான செயல்முறைகளைப் பல வங்கிகள் எளிமைப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...