CLICK HERE TO WATCH VIDEO
காவல் துறை அதிகாரி ஒருவர் கடையில் இருந்து முட்டை திருடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் காவல் அதிகாரி ஒருவர் ஜூலை 25ஆம் தேதி ஒரு முட்டைக் கடையில் இருந்து 4 முட்டைகளை யாரும் பார்க்காத வண்ணம் தனது பாக்கெட்டுக்குள் லாவகமாக வைத்து திருடுகிறார். இக்காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
அதே தேதியில் தான் இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெண் போலீசார் ஒருவர் சாக்லெட்டுகளை திருட இதை அங்குள்ள ஊழியர்கள் பார்த்துள்ளனர். மேலும், சிசிடிவி மூலம் இது உறுதியும் செய்யப்பட்டது. இதனால், அவரது கணவர் அந்தக் கடை ஊழியர்களை தாக்கினார். இந்த சம்பவத்தால், அந்தப் பெண் காவல் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருடர்களை பிடித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, தற்போது இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவது, மக்களிடையே போலீஸ் மீது அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றன.
