அரசின் விளம்பரச் செலவு எவ்வளவு???


மத்திய அரசின் விளம்பரங்களுக்காகக் கடந்த 3 நிதியாண்டுகளில் ரூ.1,600 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் மத்திய, மாநில அரசுகள் விளம்பரங்களுக்காகச் செய்த செலவு எவ்வளவு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: “டிவி, ரேடியோ, டிஜிட்டல் சினிமா, இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற டிஜிட்டல் ஊடகங்களில் மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் தரப்பட்டதற்காக மூன்று நிதியாண்டுகளில் ரூ.1,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.531.6 கோடியும், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.609.14 கோடியும், 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.468.93 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களைப் பயனாளிகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் மத்திய அரசு இவ்வாறு விளம்பரப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளின் விளம்பரங்கள் தொடர்பான செலவுப் பட்டியல் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை" எனவும் ரத்தோர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...